Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

முடக்கமும், முன்னேற்றமும் - ஜூலை மாதப் படங்கள் ஓர் பார்வை

03 ஆக, 2017 - 11:44 IST
எழுத்தின் அளவு:
July-month-movie-report-of-tamil-cinema

தமிழ்த் திரையுலக வரலாற்றில் அரசாங்கத்தின் வரி விதிப்பை எதிர்த்து தியேட்டர்கள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்ட நிகழ்வு இதுவரை நடந்திருக்காத ஒன்று. அப்படி ஒரு போராட்டம் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தை முற்றிலுமாக முடக்கி விட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பை ஏற்றுக் கொண்ட தியேட்டர்காரர்கள், தமிழ்நாடு அரசு விதித்த 30 சதவீத கேளிக்கை வரியை ஏற்க மறுத்து தியேட்டர்களை மூடினார்கள்.

ஜூலை மாதம் 3ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை நடைபெற்ற தியேட்டர் வேலை நிறுத்தத்தால் ஜூன் மாதம் 30ம் தேதி வெளியான படங்களின் வசூல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு 7ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறந்தார்கள். கேளிக்கை வரி குறித்து குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடந்து இன்னும் முடிவு அறிவிக்கப்படாமலே உள்ளது. எந்த நேரமும் அறிவிப்பு வரலாம் என்ற நிலையில் ஜூலை மாதமும் கடந்துவிட்டது.

ஜூன் 30ம் தேதி வெளியான படங்களின் வசூல் தியேட்டர்கள் ஸ்டிரைக்கால் நான்கு நாட்கள் பாதிக்கப்பட்டதால் அந்தப் படங்கள் மீண்டும் வசூலைப் பெற வழி செய்து, ஜூலை 7ம் தேதி படங்களை வெளியிட திட்டமிட்டவர்கள் அவர்களது படங்களை அடுத்தடுத்த வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்கள். இருந்தாலும் விமர்சனங்கள், வாய் வழித் தகவல்கள், சமூக வலைத்தள தகவல் பரிமாற்றங்கள் மூலம் ஜூன் 30 படங்களுக்கு இருந்த முதல் நான்கு நாள் ஓபனிங், அடுத்த நான்கு நாட்களுக்கு இடைவெளி விழுந்ததால் மீண்டும் 7ம் தேதி வெளியாகியும், அந்த ஓபனிங்கைத் தக்க வைத்துக் கொள்வது சிரமமாகவே இருந்தது.

வாரா வாரம் வெள்ளிக் கிழமைகளில் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டிருந்த இந்த ஆண்டில் 7ம் தேதி எந்த புதிய படமும் வெளியாகாமல் போனது. ஜிஎஸ்டி வரி விதிப்புடன் தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் 28 சதவீதம் அதிகமாகின. புதிய கட்டணத்தில் படங்களைப் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டாத சூழ்நிலையில் ஜூலை 14ம் தேதி படங்கள் வெளியாகின.

ஜூலை 14ம் தேதி “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நீ என்ன மாயம் செய்தாய், நிரஞ்சனா, பண்டிகை, ரூபாய், திரி” ஆகிய படங்கள் வெளிவந்தன. புதிய கட்டணங்களில் படங்களைப் பார்க்க மக்களைக் கவர்ந்திழுக்கும் படங்களாக இந்தப் படங்கள் அமையவில்லை. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படம் ஆட்டோகிராப் படத்தின் மற்றுமொரு வடிவமாகவே இருந்தது.

பண்டிகை படத்தில் பலரும் கேள்விப்படாத சண்டைப் போட்டியை மையமாக வைத்து படத்தைக் கொடுத்திருந்தார்கள். ரூபாய் படத்தில் எதிர்பாராமல் கிடைத்த பணத்தால் சிலர் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்குகிறார்கள் என்பதைச் சொன்னார்கள். திரி படத்தில் கல்விக் கொள்ளையைக் காட்டினார்கள். முந்தைய வார இடைவெளி, புதிய தியேட்டர் கட்டணத்தின் முதல் வார பாதிப்பு இந்தப் படங்களைப் பெரிதும் பாதித்தது. இல்லையென்றால் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், பண்டிகை, ரூபாய் ஆகிய படங்கள் சுமாராக ஓடியிருக்கலாம்.

ஜூலை 21ம் தேதி “88, எந்த நேரத்திலும், மீசைய முறுக்கு, பாக்கணும் போல இருக்கு, சவரிக்காடு, விக்ரம் வேதா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இசையமைப்பாளராக இருக்கும் ஆதி, நாயகனாக நடித்து அவரே இயக்கிய படம். கதை என பெரிதாக இல்லாமல் ஒரு வழக்கமான கல்லூரி காதல் கதையை, அவருடைய சொந்தக் கதையையும் கலந்து கொடுத்து இளம் ரசிகர்களைக் கவர்ந்தார். படம் வெளியான சில நாட்களிலேயே வெற்றி பெற்றுவிட்டது என நன்றி அறிவிப்புக் கூட்டமே நடத்தி முடித்தார்கள்.

ஓரம்போ, வ என தோல்விப் படங்களை இயக்கிய பிறகும் மீண்டும் கிடைத்த விக்ரம் வேதா வாய்ப்பை இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மாதவன், விஜய் சேதுபதி என புதிய கூட்டணி, படத்திற்கு பிளஸ் பாயின்டாக அமைந்து, படமும் மாற்றமாக இருந்ததால் ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைத்தது. படத்திற்குக் கிடைத்த விமர்சனங்களும் பக்கபலமாக அமைந்தன. ஜிஎஸ்டி வரியால் புதிய கட்டணங்களால் தியேட்டர்கள் பக்கம் வர யோசித்த மக்கள், “மீசைய முறுக்கு, விக்ரம் வேதா” படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். அவர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்த பெருமை இந்தப் படங்களுக்கு உண்டு. இந்தப் படங்களைத் தவிர மற்ற படங்கள் வழக்கம் போல இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்களே.

ஜூலை 28ம் தேதி “இளவட்டப் பசங்க, கூட்டத்தில் ஒருத்தன், நம்ம கத, நிபுணன், புயலா கிளம்பி வர்றோம், தப்பில்லாமல் ஒரு தப்பு” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் நிபுணன், கூட்டத்தில் ஒருத்தன் ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்கள். இந்த இரண்டிலும் நிபுணன் படம் மட்டுமே ஓரளவிற்கு விமர்சகர்களின் பாராட்டையும், கொஞ்சம் வசூலையும் பெற்றது. இந்த வரவேற்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ரசிகர்களுக்கும், படத்தைப் பாராட்டியவர்களுக்கும் நன்றி அறிவிப்பு சந்திப்பு நடத்தி நன்றி சொல்லிவிட்டார்கள்.

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் முக்கிய அம்சமே கிளைமாக்ஸ்தான். அப்படி ஒரு கிளைமாக்சுக்குப் பொருத்தமாக அதற்கு முந்தைய காட்சிகள் இல்லாமல் வேறு கோணத்தில் இருந்ததது தான் படத்திற்கு மைனஸ். மற்ற படங்கள் 28ம் தேதி வெளியாகி, தொடர்ந்து எத்தனை காட்சிகள் ஓடியது என்பதைக் கூட கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தப் படங்களைப் பற்றிய தகவல்கள் வெளியில் பரவவில்லை.

முதல் வாரத்தில் முற்றிலும் முடங்கிய ஜுலை மாதம், இரண்டாவது வாரத்தில் சில படங்கள் வந்தும் தொய்விலேயே இருந்தது. மூன்றாவது வாரத்தில் வெளிவந்த மீசைய முறுக்கு, விக்ரம் வேதா படங்கள் எதிர்பார்த்ததை விடவும் முன்னேற்றத்தைக் காட்டிய வாரமாக இருந்தது. நான்காவது வாரத்தில் வெளிவந்த நிபுணன் அந்த முன்னேற்றத்தை நிலைநிறுத்தியது. ஆனாலும், 2017ம் ஆண்டின் ஏழாவது மாதத்திலும் ஏற்றம் என்பது மெதுவாகவே இருந்தது.

அதே சமயம் ஆகஸ்ட் மாதத்தில் சில பெரிய படங்களும், சில எதிர்பார்க்கப்படும் படங்களும் வருவதால் அந்த ஏற்றம் அதிகமாகலாம் என்ற நம்பிக்கை திரையுலகத்தினரிடம் உள்ளது. அது ஏற்றமாக இருக்குமா, ஏமாற்றமாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜூலை 2017 வெளியான படங்கள்...

ஜூலை 14
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
நீ என்ன மாயம் செய்தாய்
நிரஞ்சனா
பண்டிகை
ரூபாய்
திரி

ஜூலை 21
88
எந்த நேரத்திலும்
மீசைய முறுக்கு
பாக்கணும் போல இருக்கு
சவரிக்காடு
விக்ரம் வேதா

ஜூலை 28
இளவட்டப் பசங்க
கூட்டத்தில் ஒருத்தன்
நம்ம கத
நிபுணன்
புயலா கிளம்பி வர்றோம்
தப்பில்லாமல் ஒரு தப்பு

Advertisement
தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார் ?தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் ... 'விவேகம் வீடியோக்கள் ' - ஓர் பார்வை 'விவேகம் வீடியோக்கள் ' - ஓர் பார்வை


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in