அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர்கள் பரணி, கஞ்சா கருப்பு, நடிகைகள் ஆர்த்தி, நமீதா, அனுயா, ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த வார நிகழ்வுகளை, இரண்டு நாட்கள் கமல் விமர்சனம் செய்தார். ஒருவரைப்போல் இன்னொருவரை பேச வைத்து அவர்களின் மனதில் உள்ளவற்றை வெளிக்கொண்டு வந்தார்.
கடந்த வாரம் தப்பித்த கணேஷ் வெங்கட்ராமோ அல்லது ஜூலியோ இந்த வாரம் வெளியேற்றப்படாலாம் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் ஒருவர் உள்ளே அனுப்பப்பட இருக்கிறார் என்று அறிவித்தார் கமல். அதன்படி நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பாவாடை தாவணி அணிந்து பல்லக்கில் வந்த அவர் கழுகு படத்தில் இடம்பெற்ற ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவரசம்... மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இடம்பெற்ற இன்றைக்கு குடி நோ... பாடலுக்கு ஒரு ஆட்டத்தை போட்டார். பின்பு அவர் பேசியதாவது
நான் தெலுங்கு பொண்ணுதான். ஆனாலும் நான் தெலுங்கு பிக் பாஸ் பார்க்கவில்லை. தமிழ் பிக் பாஸ் தான் பார்த்தேன். தொடர்ந்து பார்த்து வந்தபோது இதில் நாமும் கலந்து கொண்டிருக்கலாமே என்று நினைத்தேன். இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது ஒரு தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளேன். அடுத்த படத்தில் நடிக்க இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அந்த நேரத்தை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கி வைத்தேன். தற்போது வீட்டுக்குள் இருப்பவர்கள் பற்றி நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். அதனால் தாக்குபிடித்து நிற்பேன். எனக்கு யாரைக் கண்டும் பயமில்லை. ஒரு சாதாரண பெண்ணாக இந்த வீட்டுக்குள் இருப்பேன். என்றார்.
பிந்து மாதவி பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு வெப்பம் படத்தில் நடித்தாலும் கழுகு படத்தின் மூலம் தான் கவனம் பெற்றார். அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க 2, ஜாக்சன் துறை படங்களில் நடித்தார். தற்போது பக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.