பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புத்த மதத்திற்கு மாறிய மகள் அக்ஷரா ஹாசனுக்கு, நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா. இவர் தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் புத்த மதத்திற்கு மாற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது. ஆனால் அக்ஷரா அதனை மறுத்தார்.
இந்நிலையில் புத்த மதத்திற்கு மாறிய மகளுக்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அக்ஷ்ரா... புத்த மதத்திற்கு மாறி விட்டாயாமே. அப்படி மாறி இருந்தால் எனது வாழ்த்துக்கள். மதங்களைப் போல் அல்லாமல் நிபந்தனையின்றி அன்பு செலுத்த வேண்டும். களிப்புடன் வாழ வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.