சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
அக்கா ஸ்ருதி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு பட உலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும், தங்கை அக் ஷரா, ஷமிதாப் உள்ளிட்ட ஒருசில ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது, முதல் முறையாக, விவேகம் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் என்றாலும், அக் ஷராவுக்கு, இதில் முக்கியமான வேடமாம்.
''தமிழில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக காத்திருந்தேன். அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததால், உடனடியாக சம்மதித்தேன்; பல காட்சிகளில், எப்படி நடிக்க வேண்டும் என்பதை, அவர், எனக்கு பொறுமையுடன் சொல்லி கொடுத்தார்; இனி, தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்,'' என்கிறார்,
அக் ஷரா. 'அக்கா ஸ்ருதிக்கு, சரியான போட்டியாக இருப்பார் போலிருக்கிறதே' என, கோலிவுட்டில் கிண்டலாக பேசுகின்றனர்.