தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜப் ஹேரி மெட் சஜல். ஷாரூக் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருக்கிறார். இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய ஷாரூக்கானிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் ரொமான்ட்டிக்கானவரா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஷாரூக்... "இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கூச்சசுபாவன் உடையவன். ஆனால் யாரையும் எளிதில் சிரிக்க வைத்து விடுவேன், என்னை கவனிக்கும்படி செய்துவிடுவேன்" என்றார்.
ஜப் ஹேரி மெட் சஜல் படம் வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக உள்ளது.