Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

70 வயது முதியவராக நடிக்கும் உன்னி முகுந்தன்..!

27 ஜூலை, 2017 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Unni-Mukundhan-acting-as-70-year-old-man

மலையாள சினிமாவின் இளம் நடிகர் தான் உன்னி முகுந்தன்... சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கட்டுமஸ்தான உடலுடன் அசத்தியவர். தமிழில் தனுஷுடன் சீடன் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள 'பாக்மதி' என்கிற சரித்திர படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு, மலையாளத்தில் உருவாகியுள்ள 'கிளிண்ட்' என்கிற கதையம்சம் கொண்ட படத்திற்காக செய்துள்ள காரியம் தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஆம்.. 35 முதல் 70 வயது வரையிலான தோற்றங்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன்.

முகுந்தனும் ரீமா கல்லிங்கலும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை ஹரிகுமார் என்பவர் இயக்கியுள்ளார். சலீம்குமார், ரெஞ்சி பணிக்கர், ஜாய் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதில் கிளிண்ட் ஆக நடிக்கும் சிறுவனின் அப்பா, அம்மாவாக உன்னி முகுந்தனும் ரீமா கல்லிங்கலும் நடித்துள்ளனர்.

70 வயது மெலிந்த, தளர்ந்த தோற்றத்தை தனது உடலில் கொண்டு வருவதற்காக சுகர் ப்ரீ டயட்டை மேற்கொண்டாராம் உன்னி முகுந்தன். சில வாரங்கள் இதே டயட்டை தொடர்ந்ததால் உன்னி முகுந்தனுக்கு கொஞ்சம் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதாம். ஆனால் அதுவே அந்த வயதான கேரக்டருக்கு பிளஸ் ஆகவும் அமைந்துவிட்டதாம்.

சில நாட்களுக்கு முன் கொச்சியில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு இசையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in