ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல டான்ஸ் மாஸ்டரான சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, அவரது அப்பாவிடமே டான்ஸ் அஸிஸ்டென்ட்டாக பணியாற்றினார். பின்னர் டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர், நம்பர் ஒன் டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போதே ஹீரோவாக மாறினார். நடிகராக பல படங்களில் நடித்த நிலையில், இயக்குநர் அவதாரம் எடுத்தவர், பிறகு தயாரிப்பாளர் ஆனார்.
சினிமாவில் பல பரிணாமங்களைக் காட்டிய பிரபுதேவா தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி, கல்யாண் இயக்கத்தில் 'குலேபகாவலி', எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் 'யங் மங் சங்' என ஒரே நேரத்தில் மூன்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.
'யங் மங் சங்' படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து லக்ஷ்மி மேனன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் தங்கர் பச்சானும் நடிக்கிறாராம்.
இதுவரை சினிமாவில் பல துறைகளிலும் கால்பதித்துள்ள பிரபுதேவா, தற்போது 'யங் மங் சங்' படத்திற்காக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார். அம்ரீஷ் இசையமைப்பில், சங்கர் மகாதேவன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
சமீபத்தில் இப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடல் பதிவு முடிந்தவுடன் பிரபுதேவாவை அழைத்து வெகுவாகப் பாராட்டினாராம் பாடகர் சங்கர் மகாதேவன்.