டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தை தயாரித்தவர் 'ஸ்ரீகோகுலம் மூவீஸ்' கோபாலன். கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் பல வருடங்களாக ஸ்ரீ கோகுலம் சிட்பன்ட் என்ற சீட்டு கம்பெனியை நடத்தி வருகிறார்.
'பழசிராஜா' உட்பட பல மலையாளப் படங்களை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள இவர், தற்போது கமல் நடிப்பில் தயாரிப்பில் இருந்து வரும் 'சபாஷ் நாயுடு' படங்களின் தயாரிப்பிலும் கை கோர்த்துள்ளார். அண்மையில் சென்னை புறநகரில் கோகுலம் ஸ்டுடியோஸ் என்ற சினிமா ஸ்டுடியோவையும் தொடங்கியுள்ளார்.
மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் தமிழில் ஜோதிகா நடிப்பில் '36 வயதினிலே' படத்தை இயக்கியவருமான ரோஷன் ஆண்ட்ரூஸ் அடுத்து இயக்கும் படத்தை 'ஸ்ரீகோகுலம் மூவீஸ்' கோபாலன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவின்பாலி, அமலாபால் இணைந்து நடிக்கவிருக்கிறனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ராபின் ஹுட் போல் வாழ்ந்தவர் 'காயம்குளம்' கொச்சுண்ணி. அவரது வாழ்க்கை வரலாறை வைத்து 'காயம்குளம் கொச்சுண்ணி' என்ற பெயரிலேயே ஒரு படம் உருவாகவிருக்கிறது. மலையாளத்தில் எடுக்கப்படவிருக்கும் இந்த படத்தை தமிழில் டப் பண்ணி நேரடி தமிழ்ப்படம் போல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது.