‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், சில படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களில் குத்தாட்டமும் போட்டு வருகிறார். அந்தவகையில் ஓமங் குமார் இயக்கத்தில், சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படத்திலும் குத்தாட்டம் போடுகிறார் சன்னி லியோன். பிரபல நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா இந்தப்பாட்டுக்கு நடனம் அமைக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
பூமி படம் அப்பா - மகள் இடையேயான ஒரு பாசப்போராட்டம் கலந்த கதையாகவும், அதிரடி திரில்லர் கதையாகவும் உருவாகி வருகிறது. பூமி படத்தில் சஞ்சய் தத் தவிர்த்து அதிதி ராவ், சரத் கேல்கர் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது.