ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ஏற்கனவே சில படங்களில் இணைந்து நடித்துள்ள பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் தான் ஆடம் ஜான். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, கையில் துப்பாக்கியுடன் பிருத்விராஜ் போஸ் கொடுத்தபடி நிற்பதும் அதன் கீழே எழுதப்பட்ட “அவர்கள் அவளை தூரமாக எடுத்துச் சென்றார்கள். இப்போது அவன், அவர்கள் அனைவரையும் திரும்பி கீழே கொண்டு வருகிறான்” என்கிற டேக்லைனும் சேர்ந்து இது ஒரு ரிவெஞ்ச் திரில்லர் என சொல்லாமல் சொல்லின. இந்தப்படத்தில் நரேனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது, இந்தப்படம் ரிலீசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நிமிடத்திற்குள் அடங்கிவிட்ட இந்த டீசரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி நொடிகள் வரை கோர்க்கப்பட்ட காட்சிகளும் அதற்கு தக்கபடி மிரட்டலாக இணைந்து ஒலிக்கும் தீபக் தேவின் பின்னணி இசையும் நிச்சயம் படம் பார்க்கும் ரசிகர்களை திரில்லரில் உறைய வைக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிய வைத்துள்ளது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.