ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுச்சிலீக்ஸ் விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் சஞ்சிதா ஷெட்டி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' படத்தில் நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பிஜி தீவுக்கு சென்றுள்ளார். பிஜி தீவுக்கு புறப்படுவதற்கு முன் மற்றுமொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.
நீல் நித்தின் முகேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஜானி கதார் என்ற ஹிந்திப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்கள். இந்தப் படத்தை ஜீவா சங்கரின் உதவியாளரான வெற்றி செல்வன் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சஞ்சிதா ஷெட்டி நடிக்கவிருக்கிறார். பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி தவிர இந்த படத்தில் பிரபு தேவதர்ஷினி, அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே முதலானோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் தயாரிக்கிறார். விஜய் ஆண்டனி நடித்த எமன் படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செல்வனுடன் ஏற்பட்ட அறிமுகத்தில் அவருக்கு படம் கொடுத்திருக்கிறார் தியாகராஜன்.