ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மை பேன் ராமு படத்தின் மூலம் அறிமுகமானவர் சமஸ்கிருதி ஷெனாய். வழக்கு எண் படத்தின் மலையாள ரீமேக்கான பிளாக் பட்டர்பிளை, வேகம், நிக்கா, அனார்கலி, உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ளார். தமிழில் காடு, சேது பூமி, வில் அம்பு படங்களில் நடித்தார். தற்போது கனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமஸ்கிருதிக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக சமஸ்கிருதியும் கொச்சியை சேர்ந்த தொழில் அதிபர் விஷ்ணு எஸ்.நாயரும் காதலித்து வந்தனர். தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்தது. தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் தமிழ் படம் ஒன்றிலும் நடித்து வரும் சமஸ்கிருதி அவற்றை முடித்துக் கொடுத்து விட்டு அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார்.