ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'என்னடா நடக்குது இங்க' என பலர் பொறாமைப்படும் அளவிற்கு சில நிகழ்வுகள் சமீபகாலமாக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. ஒரு பக்கம் கமல்ஹாசன் அரசியலில் அதிரடியாக இறங்கி டுவீட்டுகளாக தட்டிக் கொண்டிருக்க, மறுபக்கம் அவர் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். கமல்ஹாசனுக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பெயர் வாங்கித் தருகிறதோ இல்லையோ நடிகை ஓவியாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியே ஒரு உளவியல் ரீதியான நிகழ்ச்சிதான். அப்படிப்பட்ட நிகழ்வில் பலருக்கும் ஓவியா போன்று இருக்க ஆசை. ஆனால், நிஜ வாழ்வில் அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை. ஓவியா போன்று எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் மனதில் ஒரு எண்ணம் இருப்பதால் ஓவியாவை அதிகமாக நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அது எல்லை கடந்த அன்பாகவும் மாறி வேறு எங்கோ சென்றுவிட்டது. இதனால், பலரும் பொறாமைப்பட்டு வருகிறார்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் ஓவியாவை நுழைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள். நேற்று சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முதல் பார்வை வெளியானது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் டிரைலர் வெளியானது. இரண்டு படங்களின் டைட்டிலும் ஓவியாவிற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் அந்தப் படங்களின் போஸ்டர்களில் ஓவியாவை இடம் பெறச் செய்து அசத்திவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
சூர்யாவும், உதயநிதி ஸ்டாலினும் எவ்வளவு யோசித்து அந்த டைட்டிலை வைத்தார்களோ, இப்போது அவற்றை ஓவியா அனுபவித்து வருகிறார்.