‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை அனுஷ்கா சர்மா, ஜப் மேரி மெட் சீஜல் என்ற படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் அனுஷ்கா பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம், ஜப் மேரி மெட் சீஜல் படத்தில் அவர் குஜராத்தி மொழி பேசி நடித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுஷ்கா, இந்த படத்தில் நான் குஜராத்தி பெண்ணாக நடித்துள்ளேன். அதனால் அதன் உச்சரிப்பு சரியாக வர வேண்டும் என்பதற்காக நான் மிக அதிகமாக என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
எனது பயிற்சியாளர் டிம்பிளிடம் இருந்து குஜராத்தி வார்த்தைகளை, அதனை உச்சரிக்கும் முறைகளை கற்றுக் கொண்டேன். அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் முறையிலேயே எழுதி வைத்து, பிறகு அதனை சொல்லி சொல்லி பார்த்தேன். எந்த வார்த்தைகளை நீங்கள் சரியாக முறையில், சரியாக உச்சரிக்க கற்றுக் கொண்டால் பிறகு அந்த மொழியில் உங்களால் சரளமாக பேச முடியும் என்றார்.