'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தமிழில் யாருடா மகேஷ், மாநகரம் படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன். தற்போது மாயவன், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் நட்சத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார் சந்தீப் கிஷன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 4-ந்தேதி வெளியாகிறது.
மேலும், இந்த படத்தில் அதிரடியான ஒரு போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் சந்தீப்கிஷன் முதன்முறையாக பெரிய அளவில் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறாராம். சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினையாக கதை பண்ணியிருக்கும் கிருஷ்ணவம்சி, ஹனுமனின் பண்புகளைப்போன்று போலீஸ் அதிகாரிகளின் கடமைகள் உள்ளன என்று இப்படத்தில் போலீஸ் அதிகாரிகளின் பெருமையை சொல்லியிருக்கிறாராம்.