ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மியா ஜார்ஜ் நடித்துக் கொண்டுதான் இருக்கிறாரா..? படங்கள் ஒன்றையும் அவ்வளவாக காணவில்லையே என்பது போலத்தான் அவரது படங்கள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் வந்துபோய் விடுகின்றன. ஆனாலும் இந்த வருடத்தில் தமிழில் 'ரம்', 'எமன்' மற்றும் மலையாளத்தில் 'தி கிரேட் பாதர்' என மூன்று படங்கள் அவரது நடிப்பில் வெளியாகிவிட்டன.. இன்னும் ஆறு படங்கள் போஸ்ட் படப்பிடிப்பிலும், புரொடக்சனிலும் இருக்கின்றன.
இருந்தாலும் தமிழ், மலையாளம் இரண்டிலுமே இன்னும் முன்னணி இடத்திற்கு நகர முடியாமல் சாதாரண மினிமம் பட்ஜெட் கதாநாயகியாகவே இன்னும் இருக்கிறார் மியா ஜார்ஜ். குஞ்சாக்கோ போபனின் வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி' படத்தில் ஒரே ஒரு காட்சியில் சில நொடிகளே வந்து செல்லும் கேரக்டரில் நடித்தார்.
தற்போது மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகரும், தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜுவின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'பாபி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மியா ஜார்ஜ். இந்த தயாரிப்பாளர் தயாரித்து பிருத்விராஜ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பாவாட' படத்தில் மியா ஜார்ஜ் தான் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.