'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அனுஷ்கா சர்மா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜப் ஹேரி மெட் செஜல். ஷாரூக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார், இம்தியாஸ் அலி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு மும்பையில் நேற்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்காவிடம், சினிமாவில் சிபாரி குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது....
சினிமாவில் எனக்கு யாரும் இதுவரை சிபாரிசு செய்தது இல்லை. யாஸ் ராஜ் பிலிம்ஸ் தான் என்னை அறிமுகம் செய்தது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நிறுவனம் அது. ஆகையால் இதை நான் சிபாரிசு என்று எடுத்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஷாரூக்கான், இம்தியாஸ் அலி ஆகியோர் உடன் இருந்தனர். ஆகஸ்ட் 4-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.