ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல ஹீரோக்கள் சினிமாவில் என்ன செய்தாலும் அது பாப்புலராகி விடுகிறது. அவர்களது ரசிகர்களால் பெறுமளவில் அது பின்பற்றவும் படுகிறது. அவற்றில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது தவிர மற்றபடி பெரும்பாலும் ஸ்டார்களின் பல செயல்கள் ரசிகர்களிடம் நல்ல விஷயத்தையும் விதைக்கவே செய்கின்றன. மோகன்லாலின் ரசிகர்களில் நிறையபேர் தங்களது டூவீலர் பைக்குகளை ஓரங்கட்டிவிட்டு, இப்போது ஸ்டைலான சைக்கிளுக்கு மாறி வருவதும் கூட அப்படி ஒரு ஆரோக்கியமான விஷயம் தான்.
அதற்கு காரணம் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் தான். லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் இந்தப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் இந்தப்படத்தில் கல்லூரி துணை முதல்வராக நடிக்கும் மோகன்லால், சைக்கிளில் கல்லூரிக்கு வந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இப்போது அவரைப்போலவே சைக்கிளை செல்வதை விரும்பி பைக்குகளை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளுக்கு மாறி வருகின்றனராம். இதனால் கேரளாவில் சைக்கிள் விற்பனை சற்றே உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.