தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட்டில் விண்வெளி கதைகள் பிரபலம். சயின்ஸ்பிக்சன் படமாகவும், பேண்டசி படமாகவும் நிறைய வந்திருக்கிறது. கடைசியாக வெளிவந்து வெற்றி பெற்ற படம் கிராவிட்டி. வித்தியாசமான ஹாலிவுட் படங்களை தமிழில் கொஞ்சம் உல்டா பண்ணி தருவது ஷக்தி சவுந்தர்ராஜன் பாணி.
சிக்கலான வங்கி கொள்ளையை வைத்து நாணயம் படத்தை இயக்கினார். நாயின் துப்பறியும் சக்தியை கொண்டு நாய்கள் ஜாக்கிரதை இயக்கினார், மனிதர்களை உண்ணும் சோம்பிகளை கொண்டு மிருதன் இயக்கினார். இப்போது விண்வெளி கதையை மையமாக கொண்டு டிக் டிக் டிக் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ். ஆரான் அலி, ரமேஷ் திலக், ஆரவ் நடித்து வருகிறார்கள். தமிழில் தயாராகும் முதல் விண்வெளி கதை.
இது ஒரு விஞ்ஞான கற்பனை கதை. விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரரான ஜெயம்ரவி, விண்வெளியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. 90 சதவிகிதம் கிராபிக்ஸ் பயன்படுத்தப்படும் கதை. பெரும்பாலான படப்பிடிப்புகள் இதற்கென பூந்தமல்லியை அடுத்த ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் தனியாக உருவாக்கப்பட்டுள்ள கிரீன் மேட் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் தாங்களும் விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துமாம்.