ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் வித்தியாசமான தைரியமான வேடங்களில் நடிப்பவர் ஸ்வேதா மேனன் தான். தற்போது 'நேவல் என்ன ஜூவல்' என்கிற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ஸ்வேதா மேனன். இதில் ஒரு வேடத்தில் ஆணாக நடிக்கிறாராம். இந்தப்படத்தை ரெஞ்சி லால் தாமோதரன் என்பவர் இயக்குகிறார். படத்தின் பெரும்பகுதி கதைக்களம் சிறைச்சாலையை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. அதிலும் ஈரான் நாட்டு சிறைச்சாலையை பின்னணியாக கொண்டிருக்கிறது
இந்தப்படத்தின் கதை பற்றியும், ஸ்வேதா மேனனின் கேரக்டர் பற்றியும் இயக்குனர் சொன்னதுமே அவரிடம் ஐந்து மாதம் அவகாசம் கேட்ட ஸ்வேதா மேனன் அந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாறி, அதன்பின் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தாராம். இந்தப்படத்தில் ஹாலிவுட் நடிகரான ரிம் காதின் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற நடிகரான அடில் ஹுசேன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.