Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்டு அழுதேன் : டைகர் ஷெரப்

19 ஜூலை, 2017 - 15:26 IST
எழுத்தின் அளவு:
After-failure-of-Flying-Jatt,-I-Went-in-lot-of-Depression---Tiger-Shroff

பிளையிங் ஜாட் படத்தின் தோல்விக்கு பிறகு டைகர் ஷெரப் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "முன்னா மைக்கேல்". நடனத்தை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், தனது சினிமா பயணம் குறித்தும் நம்மோடு அவர் மனம் திறந்தார். அதன் விபரம் வருமாறு...

முன்னா மைக்கேலுக்கும், மைக்கேல் ஜாக்சனுக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா?
படத்தின் பெயர் வேண்டுமானாலும் அப்படி ஒற்றுமையாக இருக்கலாம். மற்றபடி, படத்திற்கும், மைக்கேல் ஜாக்சனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. படத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு சின்ன மரியாதை செய்திருக்கிறோம். எனது பெயர் முன்னா, நான் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன், அவ்வளவு தான். நிஜ வாழ்க்கையிலும் நான் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்.

தற்காப்பு கலை நடனத்திற்கு உதவுமா?
உண்மை தான். தற்காப்பு கலை தான் என்னை நடனத்திலும் சிறப்பாக விளங்க செய்தது. நான் இன்றைக்கு இந்தளவு நடனமாடுகிறேன் என்றால் அதற்கு தற்காப்பு கலையும் முக்கிய காரணம். தற்காப்பு கலையும், நடனம் போன்று அசைவுகள் வருவதால் அப்படி தோன்றும். ஆனால் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குநர் சாபீர் கானுடன் மூன்றாவது முறையாக பணியாற்றுவது பற்றி?
முன்னா மைக்கேல் படத்தையும் சேர்த்து சாபீர் கானுடன் மூன்றாவது படம். எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது. அவரிடமிருந்து தான் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். ஹீரோபன்டி படத்தின் போது ஒரு ஆசிரியராகவும், பாகி படத்தின் போது ஒரு நண்பராக இருந்தவர், இப்போது முன்னா மைக்கேல் படத்தின் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். என்னைப்பற்றியும், எனது திறமைகள் பற்றியும் நன்கு அறிந்தவர், எதிர்காலத்தில் அவருடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவேன்.

தோல்வியை எப்படி எடுத்து கொள்வீர்கள்?
பிளையிங் ஜாட் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி எனக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியது. நான் மிகுந்த மன உளைச்சலுக்கு கூட ஆளானேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று சில இரவுகள் அழுதுள்ளேன். என் உழைப்பு மீது அதிக ஆர்வத்துடனும், கவனமுடன் இருப்பேன். கடந்தாண்டு பாகி படம் வெற்றி பெற்றது, ஆகையால் பிளையிங் ஜாட் படமும் பாக்ஸில் வெற்றி பெறும் என்று நினைத்தேன், ஆனால் அப்படி நடக்காதது ஏமாற்றம் தான்.

இயக்குநருக்கு நீங்கள் அறிவுரை சொல்வீர்களா?
நான் இயக்குநர்களின் நடிகன், என் திறமைகளை பற்றி இயக்குநர்கள் நன்கு அறிந்து என்னிடம் வேலை வாங்கி கொள்வார்கள். ஆகையால் நான் அறிவுரை சொல்ல அவசியம் இருக்காது.

சல்மானுக்கு பிறகு உங்களையும் குழந்தைகளுக்கு அதிகம் பிடிப்பதன் காரணம் என்ன?
குழந்தைகளுக்கு என்னை ஏன் பிடிக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை எனது நடனமோ அல்லது ஆக்ஷ்னோ கவர்ந்திருக்கலாம். என்னுடைய முதல்படமான ஹீரோபன்டி முதல் குழந்தைகள் என்னை விரும்புகிறார்கள். ஆகையால் தான் குழந்தைகளுக்காக பிளையிங் ஜாட் படத்தில் நடித்தேன். இந்த நாடே சல்மான் கானை விரும்புகிறது, அவருக்கு முன்னால் நான் ஒன்றுமே கிடையாது.

நன்றி என்று விடைபெற்றார் டைகர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in