அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகை டாப்ஸீ தெலுங்கில் தெலுங்கின் பிரபல இயக்குனரான ராகவேந்திர ராவ் இயக்கத்தில் மனோஜ் நாயகனாக நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த 'ஜும்மன்டி நாடம்' என்ற படத்தில்தான் டாப்ஸீ நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஏம் சக்ககுன்னவ்ரோ...' என்ற பாடலில் ஒரு இடத்தில் அவர் வயிற்றுப் பகுதி மீது பாதி தேங்காய் விழுவது போன்று காட்சிப்படுத்தல் இருக்கும். அந்தப் பாடல் பற்றி கடந்த வாரம் ஒரு பேட்டியில் டாப்ஸீ கிண்டலடித்திருந்தார்.
“ஸ்ரீதேவி, ஜெயசுதா போன்ற நாயகிகளுக்கு பழங்கள், பூக்கள் எனக்கு மட்டும் சம்பந்தமேயில்லாமல் தேங்காயா,” என அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். உடனே, தெலுங்கு ரசிகர்கள் பலரும் டாப்ஸீக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ராகவேந்திர ராவை அவர் அசிங்கப்படுத்திவிட்டதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என சமாதானப்படுத்த முயன்றார் டாப்ஸீ.
கடைசியில் தற்போது ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டு பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். இயக்குனர் ராகவேந்திர ராவ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. என்னை நானே தான் அந்த பேட்டியில் கிண்டல் செய்து கொண்டேனே தவிர அவரைப் பற்றி எதுவும் கூறவில்லை. நான் பேசியது யாருக்காவது வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.