பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆனந்தராஜ்,கோவை சரளா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் இதுவரை வெளியாகாதது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவின் ஓரிரு போட்டோக்களை மட்டுமே வெளியாகி வந்த நிலையில், வருகிற ஜூலை 23-ந்தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அதே நாளில் இன்னொரு அறிவிப்பும் வெளியாக இருக்கிறதாம். ஆனால் அது என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆக, சூர்யா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இரண்டு ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது.