டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக வலம் வருவதோடு, இப்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். முதலில் குவாண்டிகோ என்ற சிரீயலில் நடித்த பிரியங்கா அங்கு கிடைத்த புகழால் பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
இதில் இஸ்ன்ட் இட் ரொமான்டிக்? என்ற படத்தில் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக போட்டோஷூட் நடந்துள்ளது. ரொமான்டிக் காமெடி திரைப்படமான இப்படத்தை டோட் ஸ்ட்ராஸ்-சுல்சன் இயக்கவிருக்கிறார்.
யோகா தூதர் இசபெல்லாவாக பிரியங்கா சோப்ரா நடிக்க, இவருடன் நடாலி கதாப்பாத்திரத்தில் வில்சன், அவரது கிளையண்ட் ப்ளாக் கதாப்பாத்திரத்தில் லியம் ஹெம்ஸ்வொர்த், அவரது பணக்கார தோழனாக ஆடம் டிவைனும் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.