விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
நடிகர் சைப் அலிகான் மகள் சாரா அலிகான், அபிஷேக் கபூர் இயக்கும் கேதர்நாத் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சாரா அலிகானை ஹீரோயினாக்கியது ஏன்? என அபிஷேக் கபூர் கூறியிருக்கிறார். அதில், "நாங்கள் படைப்பாளிகள், எந்தப்படத்திற்கு யார் சரியாக இருப்பார்கள் என்று பார்த்து பார்த்து தான் தேர்வு செய்கிறேன். வேண்டுமென்றே புதுமுகங்களை ஹீரோயினாக்குவது கிடையாது, கதைக்கு தேவைப்படுவதால் அது இயற்கையாகவே அமைந்து விடுகிறது. சாரா அலிகான் அழகான, திறமையான நடிகை, எதிர்காலத்தில் அவர் சிறந்த நடிகையாக வருவார்" என்கிறார்.
கேதர்நாத் படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். அபிஷேக் கபூர் இயக்க, ஏக்தா கபூர் தயாரிக்கிறார். அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் ரிலீஸாகிறது.