ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மேற்கு வங்க நடிகர் விக்ரம் சட்டர்ஜியும், வங்காள தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சோனிகா சவுகானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் கோல்கட்டாவில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விக்ரம் சட்டர்ஜி அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தாக கூறப்படுகிறது.
இதனால் கார் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானதில் விக்ரம் சட்டர்ஜியும், சோனிகா சவுகானும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சோனிகா சவுகான் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். பலத்த காயத்துடன் விக்ரம் சட்டர்ஜி உயிர் தப்பினார். கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விக்ரம் சட்டர்ஜி, சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். விக்ரம் சட்டர்ஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சோனிகா சவுகானின் உறவினர்கள் வற்புறுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது விக்ரம் சட்டர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விக்ரம் சட்டர்ஜிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.