'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் நவாசுதீன் சித்திக். தற்போது இவர், மாம் என்ற படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் நவாசுதீன் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிஸ்டர் இந்தியா 2வில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நவாசுதீன் மேலும் கூறியதாவது... "ஸ்ரீதேவி நடித்த சாந்தனி, மிஸ்டர் இந்தியா, இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட பல படங்கள் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் அவரது மிஸ்டர் இந்தியா படம் மீண்டும் ரீ-மேக்கானாலோ அல்லது மிஸ்டர் இந்தியா 2 படம் உருவானால் அதில் நடிக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
"மாம்" வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.