ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் - '100% லவ்'. இந்தப் படம் '100% காதல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
'100% காதல்' படத்தை எம்.எம்.சந்திரமௌலி இயக்குகிறார். ஹெபா படேல் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், '100% காதல்' படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் 90% காட்சிகளை லண்டனில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10% காட்சிகள் மட்டுமே இந்தியாவில் படமாக்கப்பட இருப்பதாக தகவல். ஜி.வி.பிரகாஷ், லாவண்யா ஆகியோருடன் '100% காதல்' படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.