ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஷால் முதன்முதலாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்து 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடிக்கிறார். மற்றும் ஹன்சிகா, மஞ்சு வாரியர், ராசி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் மோகன்லால் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அதேசமயம் விஷால் கிரே எனப்படும் பாசிடிவ், நெகடிவ் இரண்டும் கலந்த ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். இதுபோன்ற ஒரு கேரக்டர் தனக்கு கிடைக்காதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உன்னிகிருஷ்ணன் சொன்ன கதை விஷாலுக்கு ரொம்பவே பிடித்ததால் தான் மலையாளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதுநாள்வரை வில்லன் படத்திற்கான மோகன்லாலின் மூன்று பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகிவிட்டன.. இன்று விஷாலின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.