கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.ஓ. இந்தி நடிகர் அக்சய்குமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எமிஜாக்சன் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உள்நாடு, வெளிநாடு என தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில், தற்போது லண்டனில் கிராபிக்ஸ் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரலில் வெளியான ராஜமவுலியின் பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில் பேசப்பட்டதால், ஏற்கனவே திட்டமிட்டதைவிட கூடுதல் பட்ஜெட் ஒதுக்கி 2.ஓ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
அந்த படத்தைத் தொடர்ந்து கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வரும் ரஜினி, இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது கலந்து கொண்டவர், அதன்பிறகும் ஒரு வார காலம் தமிழர்கள் வாழும் தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த வகையில், ரஜினி சம்பந்தப்பட்ட வசன காட்சிகளை மட்டுமே இதுவரை படமாக்கி வந்தார் ரஞ்சித்.
இந்நிலையில், இன்று மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. அதோடு, அங்கு 2.ஓ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறாராம். அதையடுத்து, 2 வாரங்களுக்குப்பிறகு இந்தியா திரும்பும் ரஜினி, காலா படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார். கூடவே அரசியல் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என தெரிகிறது.