பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் தேவி படத்தைத் தொடர்ந்து யங் மங் சங், மெர்லின், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, இந்தியில் சக்ரிடோல்டி இயக்கும் காமோஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் நயன்தாரா நடித்து வரும் கொலையுதிர் காலம் படத்தின் இந்தி பதிப்பாகும். தேவி படத்தை அடுத்து பிரபுதேவா-தமன்னா மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
தமிழில் கதாநாயகியை முன்னிறுத்தி உருவாகி வரும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் பிரபுதேவாவுக்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், பாகுபலி-2 படத்திற்கு பிறகு நான்கு மொழிகளில் தயாராகி வரும் சாஹோ பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாசும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, பாகுபலி படத்திற்கு பிறகு மறுபடியும் இந்த படத்தில் பிரபாஸ்-தமன்னா நடிக்கிறார்கள். இப்படத்தில் பிரபாஸ் எந்த மாதிரியான ரோலில் வருகிறார் என்பது சஸ்பென்சாக உள்ளது.