ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த முக்கியமான போட்டித் தேதி என்றால் அது செப்டம்பர் 29 தான் என்று சொல்லும்படி ஆகிவிடும் போலிருக்கிறது. ஜுலை மாதத்தில் தனுஷ் நடித்த 'விஐபி 2' படம் மட்டுமே ஓரளவிற்கு பெரிய படம். மற்ற படங்கள் 'விஐபி 2' படத்துடன் மோதும் அளவிற்கு இருக்குமா என்பது அந்தப் படங்கள் வந்தால்தான் தெரியும்.
ஆகஸ்ட் மாதத்தில் 'விவேகம்' படம் வெளிவர இருப்பதால் அதனுடன் போட்டி போட பலர் தயங்குவார்கள். இருந்தாலும் 'தரமணி' படம் 'விவேகம்' படம் வெளியாகும் தேதியிலேயே வெளி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படும் நவராத்திரி சமயத்தில் 'வேலைக்காரன்' படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து 'ஸ்பைடர்' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக 'நாச்சியார்' படமும் அதே தேதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு மோகன்ராஜா இயக்க, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் 'வேலைக்காரன்' படத்தில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து, மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க 'ஸ்பைடர்' படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
பாலா இயக்கும் படம் என்றாலே அதற்கு எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கும். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' படம் வழக்கம் போல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த மூன்று படங்களும் ஒரே தினத்தில் வெளிவந்தால் எப்படி என திரையுலகத்தில் இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டதாம்.
தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பினர் இந்தப் படங்களை ஒரே நேரத்தில் மோத விட மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதனால், இந்தப் படங்களின் வெளியீட்டுத் தேதியில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்.