Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் விவேகம் : லேட்டஸ்ட் அப்டேட்ஸ்...!

29 ஜூன், 2017 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Ajiths-Vivegam-:-latest-updates

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் படம் விவேகம். வேதாளம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், ஆரவ் சவுத்ரி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பற்றிய முதல் பார்வை வருமாறு:

  • வீரம் கிராமத்து படம், வேதாளம் நகரத்து படம், விவேகம் இண்டர்நேஷனல் படம். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாணியில் உருவாகி இருக்கும் படம். அஜித், விவேக் என்ற இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
  • காஜல் அகர்வால் வெளிநாட்டில் வாழும் இந்திய குடும்ப பெண்ணாக நடிக்கிறார். அஜித்தின் காதலியும் அவர்தான். அக்ஷ்ரா ஹாசன் வெளிநாட்டில் பிறந்த வளர்ந்த வெளிநாட்டு பெண்ணாகவே நடிக்கிறார். அஜித்துக்கு உதவும் கேரக்டர். ஆக்ஷ்ன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு வந்த செய்திகளை போன்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் அல்ல, பாசிட்டிவான கேரக்டர்.
  • "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலைகளும் நீ தோத்துட்ட... தோத்துட்ட...ன்னு உன் முன்னாடி வந்து அலறினாலும், நீயாக ஒப்புக்கிறவரைக்கும் எவனாலும் உன்னை எங்கேயும் எப்பவும் ஜெயிக்க முடியாது" டீசர்ல வருகிற இந்த வசனம்தான் கதை. "என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கைதான் பலம்" என்பது படம் சொல்ல வருகிற மெசேஜ்.
  • இண்டர் நேஷனல் ஆக்ஷ்ன் கதையாக இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கும், செண்டிமென்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது படம்.
  • செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி ஆகிய நாடுகளில் 97 சதவிகித படப்பிடிப்பு நடந்துள்ளது. கதையும் அங்குதான் நடக்கிறது. 3 சதவிதம் மட்டுமே சென்னை காட்சிகள்.
  • ஆஸ்திரியா நாட்டில் மைனஸ் 12டிகிரி குளிரில் எல்லோரும் 3 லேயர் உடை அணிந்து நடித்தபோது அஜித் கிழிந்த சட்டை அணிந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
  • அஜித்தின பைக் ரேஸ் படத்தில் முக்கியமானதாக இருக்கும், பனியில், மலையில், நெடுஞ்சாலையில், கரடுமுரடமான பாதையில் டூப் போடாமல் பைக் ஓட்டி அசத்தியிருக்கிறார்.
  • இதில் அஜித், செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி நாடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். இதற்கு உதவுவது அந்தந்த நாட்டு ராணுவம்.
  • அமிலி என்கிற போர்ஸிய நடிகை, செர்ஜன் என்கிற செர்பியன் நடிகை உள்பட பல வெளிநாட்டு நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
  • படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது.
  • விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா, அஜித் கூட்டணியே இணைய வாய்ப்பிருக்கிறது. அது விவேகத்தின் இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு கதையாகவோ இருக்கலாம். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in