தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்க பிரச்னை மூலம் பிரபலமான வாராகி என்பவர் இயக்கி நடிக்கும் படம் சிவா மனசில புஷ்பா. ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் உள்ளார். அருணகிரி இசை அமைக்கிறார், செல்லம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சிவா மனசில புஷ்பா என்ற தலைப்பின் கீழ், இது உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் வாராகி அரசியல்வாதியாக நடிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு எதிர்கட்சியை சேர்ந்த ஆண் எம்.பியும், ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது. பின்னர் இருவரும் டில்லி விமான நிலையத்தில் அடித்துக் கொண்டார்கள் அவர்களை பற்றிய கதைதான் இந்தப் படம் என்ற பரபரப்பு கிளம்பியது. இதில் வாராகி அந்த எம்.பியின் கெட்அப்பில் இருந்ததும், அவருடன் நடிக்கும் நடிகையும் நடுத்தர வயதுடையவர் என்பதும் இன்னும் பரபரப்பாக்கியது. படத் தரப்பிலிருந்து இது அவர்களின் கதைதான் என்று அறிவிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.