'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரூல் பிரேக்கர்ஸ் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் இவளுக இம்சை தாங்கல. வி.என்.ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் நான் சிவனாகிறேன் படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சஹானா நடித்துள்ளார். விஜய் டிவியின் கனாக்காணும் காலங்கள் புகழ் சிவகாந்த் முழு நீள காமெடியனாக அறிமுகமாகிறார். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலேசியப் பாப் இசைக் கலைஞர் கேஷ் வில்லன்ஸ் இசையமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் வி.என்.ராஜ சுப்பிரமணியன் கூறியதாவது:
சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை . முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன் தெருக்கள், சாலைகள் என 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மற்ற எந்தப் படமும் காட்டாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளளோம். இப்படம் முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆதிக்கம் கொண்ட இப்படத்தில் வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. என்றார்.