நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஆனந்த் எல். ராய் இயக்கி வரும் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கின் அப்பா வேடத்தில் டைரக்டரும் நடிகருமான திக்மான்சு துலியா நடித்துள்ளாராம். இப்படத்தில் கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த தகவலை திக்மான்சு உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் எனது பகுதி சூட்டிங்கை முடித்து விட்டேன். இன்னும் 2 அல்லத 3 நாட்கள் சூட்டிங் மட்டுமே மீதம் உள்ளது. இப்படத்தில் நடிப்பது மிக அற்புதமான அனுபவத்தை தந்துள்ளது. இப்படத்தில் ஷாருக்கானின் தந்தை வேடத்தில் நடிக்கிறேன். அது உண்மையில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்றார்.
பெயரிடப்படாத இந்த புதிய படம் 2018 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.