தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி, கதையின் நாயகியாக நடித்து வரும் படம் "மாம்". ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக், அக்ஷ்ய் கண்ணா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, ரவி உதய்வார் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். தாய் - மகள் இடையேயான உறவையும், மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை பழிதீர்க்க துடிக்கும் அம்மாவாக ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீஸாகும் மாம் படத்தை, சமீபத்தில் தணிக்கை அதிகாரிகள் பார்த்தனர். படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். மாம் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.