'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் முந்தைய படமான கபாலி 80 கோடி செலவில் உருவானது. அதற்கே தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விமானத்தில் விளம்பரம் செய்தார்.
2.ஓ 350 கோடியில் தயாராகும் படம். இதனால் அதன் விளம்பரத்தை இன்னும் அதிகமாக்க லைக்கா திட்டமிட்டுள்ளது. படம் உலகம் முழுவதும் திரையிடப்பட இருப்பதால் திரையிடப்படும் நாடுகளில் 100 அடி உயர பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் விளம்பரம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்து லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் கூறியிருப்பதாவது:
2.ஓ வெப்பக்காற்று பலூன் உலகம் முழுதும் பயணிக்கவுள்ளது, உலகம் நெடுகிலும் நடைபெறும் பலூன் திருவிழாவில் இந்த ரஜினி பலூன் காட்சிப்படுத்தப்படும். நாங்கள் இந்தப் படத்தை இந்தியத் தயாரிப்பாக பார்க்கவில்லை ஹாலிவுட் படமாக பார்க்கிறோம், எனவே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டு என்று விரும்புகிறோம், இதற்காக 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்தோம். செவ்வாயன்று லாஸ் ஏஞ்சலஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்தப் பலூன் பறக்கும். என்கிறார் ராஜு மகாலிங்கம்.
இந்தப் பலூன் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேல் பறக்கவுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களுக்கு இந்த வெப்பக்காற்று பலூனைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அப்போது நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூன் சவாரியில் பங்குபெறவும் திட்டமிட்டுள்ளனர்.