டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக இயக்கி, தயாரித்தவர் ஏ.பாலகிருஷ்ணன். அவர் தற்போது தனது ரமணா கம்யூனிகேஷன் சார்பில் சார்பில் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றையும் சினிமாவாக தயாரிக்கிறார்.
எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடிக்க தொடங்கிய காலத்திலிருந்து அவர் மரணம் அடைந்தது வரையிலான முக்கியமான நிகழ்ச்சிகளை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, தலைவர், முதல்வர் என அவரது அனைத்து பரிமாணங்களும் சினிமாவில் இடம்பெறுகிறது. தற்போது எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கவும், அவரது காலகட்டத்தில் வாழ்ந்த தலைவர்களின் உருவம் கொண்டவர்களின் தேர்வும் நடந்து வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட இருக்கிறது. ரமணா கம்யூனிகேஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.