ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வட இந்திய சேனல்களில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது முதன்முறையாக தென்னிந்தியாவில் ஔிப்பரப்பாகிறது. தமிழில், இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, விஜய் டிவியில் இது ஔிப்பரப்பாகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று(ஜூன் 25) முதல் ஆரம்பமானது. முதல்நாள் நிகழ்ச்சி, அறிமுக நிகழ்ச்சியாக அமைந்தது. நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு, பிக்பாஸ் நடக்கும் வீட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன், இதுநாள் 14 பிரபலங்கள் என்று மட்டுமே விளம்பரம் செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் சர்ப்ரைஸாக 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களை நடிகர் கமல் அறிமுகம் செய்து வைத்தார்.
போட்டியில் பங்கேற்கும் 15 பிரபலங்களின் விபரம் வருமாறு...
போட்டியாளர் - 1 : வழக்கு எண், மாநகரம் படங்களின் புகழ் நடிகர் ஸ்ரீ
போட்டியாளர் - 2 : எஸ்எம்எஸ், நண்பன் படங்களின் புகழ் நடிகை அனுயா,
போட்டியாளர் - 3 : பிரபல காமெடி நடிகர் வையாபுரி
போட்டியாளர் - 4 : நடிகையும், நடன இயக்குநருமான காயத்திரி ரகுராம்
போட்டியாளர் - 5 : நாடோடிகள் புகழ் நடிகர் பரணி
போட்டியாளர் - 6 : பிரபல மாடல் அழகி ரைய்சா
போட்டியாளர் - 7 : கவிஞரும், நடிகருமான சினேகன்
போட்டியாளர் - 8 : நடிகை ஓவியா
போட்டியாளர் - 9 : நடிகை ஆர்த்தி கணேஷ்
போட்டியாளர் - 10 : திருச்சியிலிருந்து ஆரவ் என்ற புதுமுகம்
போட்டியாளர் - 11 : பிரபல நடிகர் கஞ்சா கருப்பு
போட்டியாளர் - 12 : மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலி
போட்டியாளர் - 13 : நடிகர் கணேஷ் வெங்கட்ராம்
போட்டியாளர் - 14 : இயக்குநர் வாசுவின் மகனும், நடிகருமான ஷக்தி வாசு.
போட்டியாளர் - 15 : போட்டியில் சர்ப்ரைஸாக நடிகை நமீதா 15வது போட்டியாளராக பங்கேற்றார்.