தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு, தங்கள் ஹீரோவுக்கு என்றுமே வயதாக கூடாது என்பதும் மற்றவர்களின் படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்க கூடாது என்பதும் தான் முக்கிய எண்ணமாக இருக்கும். இதுநாள் வரை தனது ரசிகர்களின் அப்படிப்பட்ட எண்ணத்தை சரியாக நிறைவேற்றி வந்தார் தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோவான வெங்கடேஷ்.. ஆனால் இப்போது அந்த உறுதியை குலைக்கும் விதமாக ஒரு விஷயம் நடக்க இருக்கிறதாம்..
அதாவது தற்போது த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துவரும் படத்தில் ஐந்து நிமிடங்கள் வந்து போகக்கூடிய முக்கியமான, கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம் வெங்கடேஷ். அதிலும் பவன் கல்யாணுக்கு மாமாவாக நடிக்கிறாராம். அதனால் அவரது ஹேர்ஸ்டைலை லைட்டாக சால் அன்ட் பெப்பர் லுக்கில் மாற்றப் போகிறார்களாம். இந்த இரண்டையுமே வெங்கடேஷ் செய்வது இதுதான் முதன் முறையாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ, வெங்கடேஷின் இந்த புதிய அவதாரம் ஒருவேளை ஒர்க் அவுட் ஆகிவிட்டால் அடுத்ததாக பல இயக்குனர்களும் அவரை கெஸ்ட் ரோல் ஹீரோவாக மாற்றிவிடுவார்களே என்கிற அச்சத்தில் இருக்கிறார்களாம்.