Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஞ்சு வாரியர் குறித்த விஷாலின் வருத்தம்..!

22 ஜூன், 2017 - 14:46 IST
எழுத்தின் அளவு:
Vishal-feels-about-Manju-Warrier

மலையாள சினிமாவில் பீக்கில் இருந்த நேரத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியபோதும் சரி, பல வருடங்கள் கழித்து கணவர் திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தபோதும் சரி, நடிகை மஞ்சு வாரியருக்கான மவுசு கொஞ்சம் கூட குறையவே இல்லை. இப்போதும் கூட மோகன்லாலின் இரண்டு படங்களில் தொடர்ந்து அவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்னும் அவருடன் இணைந்து நடிக்க மலையாள நடிகர்கள் பலர், அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக, தம்பியாக, மகனாக என ஏதோ ஒரு விதத்தில் நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்கிறது.
தமிழ் நடிகர்களில் அப்பட்டிப்பட்ட ஒரு வாய்ப்பு மஞ்சு வாரியாரின் தீவிர ரசிகரான விஷாலுக்கு கிடைத்தது. ஆம், மோகன்லால், மஞ்சு வாரியார் இணைந்து நடிக்கும் படத்தில் விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஆனாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற கதையாக ஒரே படத்தில் நடித்தாலும் கூட மஞ்சு வாரியருடன் சேர்ந்து நடிக்கும்படியான காட்சி ஒன்று கூட படத்தில் இல்லை என்பது விஷாலுக்கு வருத்தத்தை தந்துள்ளதாம்.
“மஞ்சு வாரியாரின் தீவிர ரசிகன் நான்.. அவருடன் ஒரே படத்தில் நடித்தாலும் அவருடன் நடிக்க முடியவில்லை என்கிற வருத்தம் நிறையவே இருக்கிறது.. இருந்தாலும் மோகன்லால், மஞ்சு வாரியர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் டைட்டில் கார்டில் எனது பெயரும் இடம் பெற்றிருப்பதே மிகப்பெரிய சந்தோசம் தான். இந்தப்படத்தில் எனது கேரக்டரில் நெகடிவ் சாயல் இருக்கும் என்றாலும் கூட, படத்தின் 'குட் இஸ் பேட்' என்கிற டேக்லைனை வைத்து பார்க்கும்போது என் கேரக்டர் பற்றி உங்களால் சட்டென ஒரு முடிவுக்கு வரமுடியாது என கூறியுள்ளார் விஷால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in