நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
கௌதம் மேனன் தயாரிப்பு, இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படம் ஜனவரி மாதம் ஆரம்பமானது. படத்தின் சில காட்சிகளையும், டீசருக்காக சில காட்சிகளையும் படமாக்கினார்கள். பொங்கல் சமயத்தில் முதல் டீசரையும், தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் இரண்டாவது டீசரையும் வெளியிட்டார்கள்.
அதற்குள்ளாகவே கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பணப் பிரச்சனையால் இந்தப் படம் தொடர்வது சந்தேகம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதைப் படக்குழுவினர் மறுத்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு முன்பாகவே விக்ரம் 'ஸ்கெட்ச்' படத்தில் நடிக்க தேதிகளைக் கொடுத்துவிட்டதாகவும். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பமாகும் என்றார்கள்.
விக்ரம் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பைத் தற்போது முடித்துக் கொடுத்துவிட்டதால் மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பமாக உள்ளது. அடுத்த சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்லோவேனியா நாட்டில் நடக்க உள்ளது. அங்கு தொடர்ந்து சில வாரங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டட்டுள்ளார்களாம்.
கௌதம் மேனன் இதற்கு முன் தயாரித்து இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் எப்போது வெளிவரும் என்று தெரியாத நிலையில், அவர் இப்போது மீண்டும் 'துருவ நட்சத்திரம்' வேலைகளில் இறங்கிவிட்டார். அதோடு 'துருவங்கள் 16' கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நரகாசூரன்' படத்தையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
எனவே தனுஷ் ரசிகர்கள் 'எனை நோக்கி பாயும் தோட்டா' வை ரசிப்பதற்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது.