அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அமரகாவியம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மியா ஜார்ஜ் தொடர்ந்து இங்கே சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் மலையாள திரையுலகத்தை அப்படியே மறந்து விடுவதுதான் வழக்கம்.. ஆனால் மியா ஜார்ஜ் மட்டும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருகிறார். கூடுதலாக தற்போது தெலுங்கிலும் நடித்து வருவதால் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
மியா ஜார்ஜின் பேஸ்புக்கிற்கு இதுவரை 1 கோடி லைக்ஸ் கிடைத்துள்ளது. இதை மகிழ்ச்சியோடு தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் மியா, இந்த ஒரு கோடி லைக்குகள் தகவலை தெரிவித்த கையோடு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் மியா ஜார்ஜ். மலையாளத்தை பொறுத்தவரை இதற்கு முன்னர் நஸ்ரியா தான் அதிகபட்சமாக 76 லட்சம் லைக்குகள் பெற்றிருந்தார். தற்போது ஷெர்லக் டோம்ஸ் என்கிற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார் மியா.