இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விமர்சனங்களுக்கான ரேட்டிங் பற்றி எனக்கு கவலையில்லை என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். நடிகர் சல்மான் கான் நடிப்பில் வரும் வாரம் ரிலீஸாக உள்ள படம் டியூப்லைட். இதனால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...
"விமர்சனங்களின் ரேட்டிங் பற்றி கவலையில்லை. ஒருவரின் ரேட்டிங் படக்குழுவினரின் ஒட்டுமொத்த கடின உழைப்பையும் பாதிக்காது. ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். படம் நன்றாக இருக்கிறதா... இல்லையா என்று... அதன்மூலம் அந்தப்படம் பாக்ஸ் இணைவது, இணையாதது அவர்கள் வாயிலாக தெரிந்துவிடும். ஒருவரின் நெகட்டீவ்வான விமர்சனம், படத்தை மட்டுமல்லாது அதற்காக கொடுத்த உழைப்பையும் பாதிக்கும். என்னுடைய படங்கள் விமர்சிக்கப்பட்டு இருக்கின்றன. விமர்சனம் செய்பவர்களுக்கு நான் சொல்வது என்னுடைய படத்திற்கு ஜூரோ ஸ்டார் அல்ல மைனஸ் 100 ஸ்டார் கூட கொடுங்கள், எனக்கு அதுப்பற்றி கவலையில்லை. என்னுடைய ரசிகர்கள் என் படத்தை பார்த்தால் போதும், அதையே நான் விருதாக கருதுகிறேன்" என்று தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார் சல்மான்.
டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.