ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில் உருவாகி வரும் படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. குறிப்பாக திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்கும் வகையில் ஒரு சமூக விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஸ்ரீ நாராயண் சிங் இயக்குகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அக்ஷ்ய் குமாருடன் நடித்த அனுபவம் பற்றி பூமி பத்னேகர் கூறியிருப்பதாவது... "அக்ஷ்ய் குமார் அருமையான நடிகர், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் நான் நடித்த படங்களில் டாய்லெட் தான் மிகவும் சிறப்பு மிக்கவை. இப்படியொரு படத்தில் நடித்ததற்காக ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. அக்ஷ்ய் உடன் நடிப்பது நீண்டநாள் விடுமுறைக்கு செல்லும் உணர்வை தரும். மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் அக்ஷ்ய், எப்போதும் படப்பிடிப்பில் கலகலப்பாக இருப்பார்" என்றார்.