கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இன்னும் சில தினங்களில் விஜய்யின் பிறந்தநாள் வர இருக்கிறது. பொதுவாக விஜய், தன் பிறந்தநாளின் போது, அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாக தொடர்ந்து வந்தார். மேலும் மாலையில் ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். ஆனால் சில ஆண்டுகளாகவே இவை எல்லாவற்றையும் தவிர்த்து வருகிறார் விஜய். அதோடு தன்னுடைய பிறந்தநாள் அன்று வெளிநாடு சென்று விடுகிறார்.
இந்நிலையில், இந்தாண்டு விஜய் ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுப்பற்றி நாம் விசாரித்த போது... இந்தாண்டும் ரசிகர்களை அவர் சந்திக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அட்லியின் படத்தில் நடித்து வரும் விஜய், அன்றைய தினம் படப்பிடிப்புக்காக சென்னையில் இருக்க மாட்டார் என்கிறார்கள். இல்லையென்றால் அவர் குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
தலைவா படத்திலிருந்து அடுத்தடுத்த பல படங்களின் ரிலீஸ்க்கு ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, விஜய், ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் அமைதியாக, நிதானமாக நகர்த்தி செல்கிறார். என்னதான் விஜய் அமைதியாக இருந்தாலும் அவரது ரசிகர்கள், வழக்கம் போல் இந்தாண்டு விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு விதமான சமூக நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதோடு, விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் தலைப்பும் அன்றைய தினம் அறிவிக்க இருப்பதால் இந்தாண்டு விஜய்யின் பிறந்தநாளை இரட்டிப்பு கொண்டாட்டத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.