ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சன் ஆப் சத்யமூர்த்தி, சரைனோடு ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்குப்பிறகு அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் டிஜே துவ்வாத ஜெகன்னாதம். இந்த படத்தை ஹரீஷ் சங்கர் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படம் ஜூன் 23-ந்தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக, தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
மேலும், தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் அல்லு அர்ஜூன் இந்த படம் ஹாட்ரிக் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம். அதோடு, சமீப காலமாக வடஅமெரிக்காவிலும் அல்லு அர்ஜூனின் படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், இந்த டிஜே துவ்வாத ஜெகன்னாதம் படத்தை வட அமெரிக்காவில் இதுவரையில்லாத அளவுக்கு சுமார் அதிக தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் தில்ராஜ் தெரிவித்துள்ளார்.