'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக நடித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்த படத்தை இன்பசேகரன் இயக்கியுள்ளார். மேலும், ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜூன் மாதம் 16-ந்தேதி இப்படம் திரைக்கு வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை வருகிற ஜூன் 30-ந் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். ஆனால் இப்படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை இயக்குநர் மறுத்துள்ளார்.
இதுபற்றி டைரக்டர் இன்பசேகரன் கூறுகையில், அதாகப்பட்டது மகாஜனங்களே படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கும், உமாபதிக்கும் இது முதல் படம் என்பதால், சரியான நேரத்தில் சரியானபடி படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். அதனால் தான் ஜூன் 16-ந்தேதி எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்காததால், ரிலீஸ் தேதியை ஜூன் 30-ம் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறோம். இந்த தேதியில் 125 தியேட்டர்களில் அதாகப்பட்டது மகாஜனங்களே படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்கிறார் இயக்குனர் இன்பசேகரன்.