'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான் நடிக்க உள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். அமீர்கான் உடன் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி அமீர்கான் கூறியிருப்பதாவது... "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் கதை அருமையானது. என்னுடைய கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது. ஆதித்யா சோப்ரா படத்தில் நடிப்பது பெருமை. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா படத்தில் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. எல்லாவற்றையும் விட அமிதாப் பச்சன் உடன் நடிப்பதை எண்ணி மிகுந்த ஆவலில் உள்ளேன். முதன்முறையாக அவருடன் இணைந்து நடிக்க உள்ளேன். அவருடன் இணைந்து நடிப்பதை கவுரவமாக கருதுகிறேன்" என்றார்.
தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 5ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது.